சூதாட்ட புகாரில் சிக்கிய வங்கதேச கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷோஹேலி அக்தருக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2023-ல் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பையில் இடம்பெறாத ஷோஹேலி சூதாட்டத்தில் ஈடுபட சக வீராங்கனையை வற்புறுத்தியுள்ளார். ஹாட் விக்கெட் முறையில் விக்கெட் இழந்தால் பெரிய தொகை தருவதாக சக வீராங்கனையிடம் ஷோஹேலி கூறியுள்ளார். கிரிக்கெட் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தடை நடவடிக்கைக்கு உள்ளான முதல் வீராங்கனை ஷோஹேலி அக்தர் ஆவார்.
The post சூதாட்ட புகாரில் சிக்கிய வங்கதேச கிரிக்கெட் அணியின் வீராங்கனைக்கு 5 ஆண்டுகள் தடை appeared first on Dinakaran.