* உரிமையாளர் கைது
* 6 பெண்கள் மீட்பு
சென்னை: மயிலாப்பூர், சிஐடி காலனி, பிஷப் வாலர்ஸ் அவென்யூ தெற்கு பகுதியில் ஸ்பா சென்டர் இயங்கி வருகிறது. இந்த சென்டருக்கு வரும் முதியவர்களிடம் இளம்பெண்களை காட்டி பாலுணர்வை தூண்டி பாலியல் தொழில் செய்து வருவதாக மயிலாப்பூர் போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன. அதன்பேரில், மயிலாப்பூர் போலீசார் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட ஸ்பா ெசன்டரில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, ஸ்பா சென்டருக்கு வரும் வசதியான முதியவர்கள் மற்றும் வாலிபர்களிடம் அழகான இளம்பெண்கள் மூலம் சிகை அலங்காரம் உள்ளிட்ட வேலைகள் ெசய்யும் போது, பாலுணர்வை தூண்டி பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து போலீசார் அதிரடியாக ஸ்பா சென்டர் நடத்தி வந்த எம்ஜிஆர்.நகர் திருநாவுக்கரசர் தெருவை சேர்ந்த கணேஷ்குமார் (45) என்பவரை கைது செய்தனர். மேலும், ஸ்பா சென்டரில் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட 6 இளம்பெண்களை மீட்டு நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
The post மயிலாப்பூர் சிஐடி காலனியில் ஸ்பா சென்டரில் பாலியல் தொழில் appeared first on Dinakaran.
