நாமக்கல், பிப்.12: மோகனூரில் உள்ள காந்தமலையில் பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில், தைப்பூச விழாவையொட்டி, நேற்று காலை தேரோட்டம் நடந்தது. ராமலிங்கம் எம்எல்ஏ, பேரூராட்சி தலைவர் வனிதா சரவணன், துணைத்தலைவர் சரவணகுமார், திமுக ஒன்றிய செயலாளர் நவலடி, பேரூர் செயலாளர் செல்லவேல், அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவல் குழு உறுப்பினர்கள் செல்வசீராளன், டாக்டர் மல்லிகா குழந்தைவேல் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோயிலை சுற்றி தேர் வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
The post காந்தமலை முருகன் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.
