பணம் இல்லாததால் கத்தியை திருடி சென்ற மர்ம நபர்

ஓமலூர், பிப்.11: ஓமலூர் நகரில் அலங்கார் தியேட்டர் அருகில் கோழி இறைச்சி கடை உள்ளது. நேற்று முன்தினம், வியாபாரத்தை முடித்து கடையை மூடிச்சென்ற நிலையில், நள்ளிரவில் கடைக்குள் புகுந்த மர்ம நபர், கல்லாபெட்டி உள்ளிட்ட இடங்களில் பணம் உள்ளதா என தேடிப்பார்த்தான். ஆனால் பணம் எதுவும் கிடைக்க வில்லை. கடையில் கோழியும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர், கோழி வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து, அங்குள்ள பொருட்கள் சிலவற்றை ஆத்திரத்தில் வெட்டினார். பின்னர், கத்தியை மட்டும் எடுத்துக்கொண்டு, சிரமப்பட்டு கதவின் வழியாக வெளியேறினார். நேற்று காலை கடைக்கு சென்றவர்கள், கடையில் மர்ம நபர் புகுந்தது, பணம் மற்றும் கோழி கிடைக்காததால், கத்தியை மட்டும் எடுத்துச்சென்ற சிசிடிவி வீடியோ காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ஓமலூர் நகர மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திடுள்ளது.

The post பணம் இல்லாததால் கத்தியை திருடி சென்ற மர்ம நபர் appeared first on Dinakaran.

Related Stories: