வள்ளலூர் நினைவு தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 11-ல் விடுமுறை

 

பெரம்பலூர்,பிப்.8: வள்ளலார் நினைவு தினத்தையொட்டி, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்திற்கும் வரும் 11ஆம் தேதி ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் ெதரிவித்துள்ளார்.
இது பற்றிய அவர் தெரிவித்திருப்பதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் டாஸ்மாக் மதுபானக் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும், வடலூர் வள்ளலார் நினைவு தினமான வருகிற 11ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் உலர் தின மாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post வள்ளலூர் நினைவு தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 11-ல் விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: