ஹமாஸ் அமைப்பினர் தற்போது வரை இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் மட்டுமே கவனம் செலுத்தியது. ஆனால் தற்போது தெற்காசியா முழுவதும் செயல்படும் அடிப்படைவாத அமைப்புகளுடன் ஹமாஸ் பிரிவினர் தொடர்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வெளியான வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் பேசும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவன் ஒருவன், ‘இந்திய பிரதமர் மோடியும், அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நமது எதிரிகள்’ என பேசியுள்ளான்.
இந்த நிகழ்ச்சியில் லஷ்கர்-இ-தொய்பா, ஹமாஸ், ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் உண்மைதன்மை குறித்து இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஹமாஸ் மோடியும், அமித் ஷாவும் எதிரிகள்; தீவிரவாதிகளின் வீடியோ வைரல் appeared first on Dinakaran.