மாணவியிடம் சில்மிஷம் ஆசிரியர் அதிரடி கைது

சேலம்: சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். அந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓமலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 2ம் தேதி உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சி முடிந்து குழு புகைப்படம் எடுத்துள்ளனர்.

அப்போது, அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் (48), பிளஸ்-1 மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவி புகார் தெரிவித்தார். அவர் உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் மீது ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி, ஈரோடு சாஸ்திரிநகரை சேர்ந்த அந்த உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நேற்று அவரை கைது செய்தனர்.

The post மாணவியிடம் சில்மிஷம் ஆசிரியர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: