திருமுல்லைவாயலில் அதிமுக வட்ட செயலாளருக்கு வெட்டு

ஆவடி: திருமுல்லைவாயலில்அதிமுக வட்ட செயலாளரை வெட்டிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், அதிமுக 8வது வார்டு வட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் எட்டியம்மன் கோயில் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ராஜசேகர், அவரது நண்பர்களான கார்த்திகேயன் மற்றும் வினோத் ஆகிய மூவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். இதில், பலத்த காயம் ஏற்பட்ட அதிமுக வட்டச் செயலாளர் ராஜசேகர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அவரது நண்பர் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருமுல்லைவாயில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post திருமுல்லைவாயலில் அதிமுக வட்ட செயலாளருக்கு வெட்டு appeared first on Dinakaran.

Related Stories: