சட்டீஸ்கரில் பயங்கரம்: வாலிபரை அடித்து கொன்ற நக்சலைட்டுகள்


தண்டேவாடா: சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டம்,கக்காடி கிராமத்தை சேர்ந்தவர் ஹட்மா எம்லா(30) நக்சலைட்டுகளின் நடமாட்டம் குறித்து போலீசுக்கு தகவல்களை அளித்து வந்ததாக நக்சலைட்டுகள் சந்தேகப்பட்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஹட்மாவை நக்சலைட்டுகள் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அவருடைய கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர்.

அதன் பின்னர் உடனே கிராமத்துக்கு அருகே உள்ள இடத்தில் போட்டு விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலையில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சட்டீஸ்கரில் பயங்கரம்: வாலிபரை அடித்து கொன்ற நக்சலைட்டுகள் appeared first on Dinakaran.

Related Stories: