தீ வேகமாக பரவியதால் தொழிற்சாலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரசாயன பேரல்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் தீ சுமார் 150 அடி உயரத்திற்கு மேல் கொழுந்துவிட்டு எரிந்தது. நெடியுடன் கூடிய புகை பரவியதால் அக்கம்பக்கத்தில் வசித்த பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. விஷவாயு பரவியிருக்குமோ என பீதியடைந்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஐதராபாத் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் 6 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய போராடி இன்று காலை தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகியிருக்கலாம் என தெரிகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஐதராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஐதராபாத்தில் பரபரப்பு; தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; ரசாயன பேரல்கள் வெடித்து சிதறியது: விஷவாயு பீதியில் பொதுமக்கள் ஓட்டம் appeared first on Dinakaran.
