பிஷப் ஹீபர் கல்லூரியில் தியாகிகள் தினம் அனுசரிப்பு

 

திருச்சி: இந்திய சுதந்திரப் பேராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளைக் கெளரவப்படுத்தும் விதமாக, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் விரிவாக்கப் பணிகள் புலம் மற்றும் புதுக்கோட்டை லிங்ஸ் இன்ட்ராடிக்வ்ஸ் பொது நல அமைப்பும் இணைந்து தியாகிகள் தின விழாவை திறம் பெற நடத்தினர். விழாவில் பிஷப் ஹீபர் கல்லூரியின் விரிவாக்கப் புல முதன்மையர் முனைவர் ஆனந்த் கிதியோன் தலைமை வகித்தார்.

லிங்ஸ் இன்ட்ராடிக்வ்ஸ் நிறுவன ஆலோசகர் முகமது இஸ்மாயில் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகத் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறையைச் சார்ந்த 98 வயது நிரம்பிய சுதந்திரப் போராட்டத் தியாகி சுந்தரம் மற்றும் எட்டரை கிராமத்தைச் சார்ந்த மறைந்த சுதந்திரப் போராட்டத் தியாகி சங்கப் பிள்ளையின் மனைவி பிச்சையம்மாள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சுதந்திரப் பேராட்டத்தில் தாங்கள் ஆற்றிய பங்களிப்பினையும், தியாகங்களையும் நினைவு கூர்ந்தனர். தாய்நாட்டிற்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளையும் எடுத்துக் கூறினர். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் தியாகிகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

The post பிஷப் ஹீபர் கல்லூரியில் தியாகிகள் தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: