தொன்போஸ்கோ பெருவிழா

சேலம், பிப்.4: சேலம் முள்ளுவாடி கேட்டில் உள்ள தொன்போஸ்கோ அன்பு இல்லத்தில், புனித தொன்போஸ்கோ பெருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இல்லத்தின் இயக்குநர் கஸ்மீர்ராஜ் தலைமை வகித்தார். சேலம் மறை மாவட்ட பொருளாளர் ஜேக்கப் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். தென் மத்திய குளுனி சபையின் மாநில தலைவி லூர்துமேரி, ஆத்தூர் வனக்கோட்ட அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொன்போஸ்கோவின் வாழ்க்கையை நாடகமாகவும், நடனத்தின் மூலமும் மாணவ- மாணவிகள் வெளிப்படுத்தினர். அன்பு இல்லத்தில் படித்து உயர்நிலையில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட புத்தகம் வெளியிடப்பட்டது. விழாவில் புனித மிக்கேல் ஆலய பங்கு தந்தை எர்வர்ட் ராஜன், சேலம் சமூக சேவை இயக்குநர் டேவிட், சிறுமலர் மெட்ரிக் பள்ளி முதல்வர் டேவிட், அருட்தந்தையர்கள் ஜெரோம், மதலைமுத்து, தன்ராஜ் மற்றும் அருட்சகோதரிகள், சலேசியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post தொன்போஸ்கோ பெருவிழா appeared first on Dinakaran.

Related Stories: