ஆறுமுகநேரி,பிப்.4: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் திருச்செந்தூர் ஒன்றிய அமமுக செயலாளரும், முன்னாள் ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவருமான பொன்ராஜ் தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்ட அமமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை அமமுக துணைபொதுச்செயலாளரும், தென் மண்டல பொறுப்பாளருமான மாணிக்கராஜா பரிந்துரையின் பேரில் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.
The post தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் நியமனம் appeared first on Dinakaran.
