துவக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர். சஞ்சு 16 ரன்னில் அவுட்டானார். இருப்பினும் அபிஷேக் சர்மா இங்கிலாந்து பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் மழை பொழிந்தார். 17 பந்துகளில் 50 ரன்னை எட்டிய அவர், 37 பந்துகளில் சதம் விளாசினார். எதிர்முனையில் விக்கெட்டுகள் விழுந்தபோதும் நிலைத்து நின்று ஆடிய அபிஷேக் சர்மா, 54 பந்துகளில் 135 ரன் குவித்து அவுட்டானார்.
அதில், 13 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடக்கம். 20 ஓவர் முடிவில் இந்தியா 9 விக். இழப்புக்கு 247 ரன் குவித்தது. இதையடுத்து 248 ரன் மெகா இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 10.3 ஓவரில் 97 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்தியா 150 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. இந்தியாவின் முகம்மது ஷமி 3, வருண் சக்ரவர்த்தி, சிவம் துாபே, அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
The post இங்கிலாந்துடன் 5வது டி20 அபிஷேக் அதிரடி ஆட்டம் இந்தியா அபார வெற்றி appeared first on Dinakaran.
