“ஒவ்வொருத்தருக்கும் ஒரு பாணி உண்டு. அதுபோல விஜய்க்கு தொலைநோக்கில் தான் அரசியல் செய்ய வேண்டும். ஒர்க் பிரம் ஹோம் மற்றும் இணையதளத்தில் தான் பணி செய்ய வேண்டும் என்று நினைத்தால் எதுவும் செய்ய முடியாது. எங்களைப் போன்ற தலைவர்கள், மக்களோடு மக்களாக பழகும் தலைவர்களே சரியான தலைவர்கள் என நினைக்கிறோம். அதனை விஜய் முடிவு செய்யட்டும். மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் சகோதர, சகோதரிகளுக்கு வரியே இல்லை என்பது வரி வரியாக கொண்டாடக்கூடிய பட்ஜெட்.
எது கொடுத்தாலும் பற்றாக்குறையாக தான் இருக்கும், எதற்கு கொடுத்தாலும் திருப்திகரமாக இருக்காது. மருத்துவத்துறை, வேளாண் துறை, நெசவாளர்கள் மாணவர்கள் மகளிர், இளைஞர்கள் முதியவர்கள் என எல்லாருக்குமான பட்ஜெட் இது. புதிதாக தொழில் தொடங்குவதற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி உள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர் எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்வது சாதாரண விஷயம் அல்ல, அதிலும் அழகாக திருக்குறளை முன்னெடுத்து இருக்கிறார். இதனால் தமிழர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* தமிழகத்தை சேர்ந்தவர் எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்வது சாதாரண விஷயம் அல்ல, அதிலும் அழகாக திருக்குறளை முன்னெடுத்து இருக்கிறார். இதனால் தமிழர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
The post தமிழிசை கடும் காட்டம்`ஒர்க் பிரம் ஹோம்’ விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது appeared first on Dinakaran.
