மாற்றுத்திறனாளிகளின் திறமையை பயன்படுத்தி அவர்களின் கனவுகளை நனவாக்க கடந்த 10 ஆண்டுகளாக பல கொள்கைகள் உருவாக்கப்பட்டு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அச்சுறுத்தும் நிலைமைகளை கடந்து வெற்றி ஈட்டுபவர்களாக மாற்றுத்திறனாளிகள் விளங்குகிறார்கள். இந்திய பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் ஏராளமான பதக்கங்களை வென்றிருப்பது இதற்கு சான்று. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கான உணர்திறன் தேவை. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயணன் சிங், மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.லட்சுமண், திருச்சி சிவா, ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தின் இயக்குநர் நசிகேத ரவுத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post மாற்றுத்திறனாளிகளின் சிறப்பான செயல்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான தருணம் இது: ஜெகதீப் தன்கர் பேச்சு appeared first on Dinakaran.
