விசாரணையில் திருச்சி வரகநேரியை சேர்ந்த தாஜ்முகமது(35), முகமதுரியாஸ்(30), சிராஜ்தீன்(31), அபுபக்கர்சித்திக்(31) என்பதும் பைகளில் தலா ரூ.40 லட்சம் இருந்ததும், அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை எனவும் தெரிய வந்தது. காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் ஹவாலா பணம் என்பதை ஒப்புக்கொண்டனர். ெசன்னை பிராட்வே பகுதியிலிருந்து திருச்சிக்கு பணத்தை கொண்டு செல்வதாகவும், ஒரே பேருந்தில் சென்றால் சிக்கிக்கொள்வோம் என்று விழுப்புரத்திற்கு வந்து அங்கிருந்து திருச்சி பேருந்தில் ஏற சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
பணம் கொடுத்தது யார் என்பதும், யாரிடம் கொடுப்பது என்பதும் தகவல்கள் தெரியாது, சென்னை பிராட்வேயில் ஹெல்ெமட் அணிந்து பைக்கில் வந்த நபர் பணத்தை கொடுத்துவிட்டு சென்றார். திருச்சி சென்றதும் அங்கு பணத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என போனில் சொல்வார்களோ அவர்களிடம் கொடுத்துவிட்டு செல்வதுதான் எங்கள்வேலை. கமிஷன் அடிப்படையில் வேலை செய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து, ஹவாலா பணம் ரூ.1.60 கோடியை பறிமுதல் செய்து, வருமானவரித்துறையிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
The post சென்னையிலிருந்து திருச்சி செல்லும்போது ரூ.1.60 கோடி ஹவாலா பணத்துடன் 4 பேர் கும்பல் பிடிபட்டது: விழுப்புரம் பஸ் நிலையத்தில் சிக்கினர் appeared first on Dinakaran.
