இடைப்பாடி, ஜன.31: இடைப்பாடி பஸ் நிலையத்தில், சங்ககிரி வட்டார போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும், போதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது, செல்போன் பேசிக்கொண்டு ஓட்டக்கூடாது, சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு குறித்த கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சங்ககிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், புஷ்பா ஆகியோர் தலைமை வகித்தனர். போக்குவரத்து கிளை மேலாளர் சதாசிவம், எஸ்ஐ லதா தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்து ஆட்டோ, பஸ் டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
The post சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.
