கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் உயிரிழப்பு


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த போந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால் (55). இவர் அதே பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் ஆடு மாடுகள் வயல்வெளி பகுதியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டன. அப்போது வேணுகோபாலின் மனைவி மல்லிகா அவ்வழியாகச் சென்றுள்ளார். அங்கு இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்த நிலையில் இருந்ததைக் கண்ட மல்லிகா அதிர்ச்சியடைந்தார். மாடுகளை தொட்டபோது அவர்மீது லேசாக மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அங்குள்ள மின்கம்பத்தின் அடிப்பாகம் உடைந்தநிலையில் இருப்பதால், அதன் மேலே இருந்து மின்கசிவு ஏற்பட்டு அருகே உள்ள குட்டை உள்ள நீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அதை தெரியாமல் மாடுகள் தொட்டபோது மின்சாரம் பாய்ந்து இறந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாடுகளுக்கு மின்வாரிய துறையினர் மூலம் இழப்பீடு பெற்றுத்தர கலெக்டர் உத்தரவிட வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: