கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ செந்தில்குமார், தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முத்துமாரி ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் சரவணகுமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலக ஊழியர்கள் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூடலூர் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சுவீதா ஸ்ரீ தேசியக்கொடி ஏற்றினார். நகராட்சி தலைவர் பரிமளா இனிப்பு வழங்கினார்.
நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். கூடலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வர் (பொறுப்பு) சுபாஷினி தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.
கல்லூரி மாணவ-மாணவிகள், விரிவுரையாளர்கள், அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். கூடலூர் சார்பு நீதிமன்ற வளாகத்தில் கூடலூர் சார்பு நீதிபதி முகமது அன்சாரி தேசிய கொடி ஏற்ற மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் சசின்குமார் முன்னிலை வகித்தார்.
மூத்த வழக்கறிஞர்கள் சுகுமாரன், சைனூல் பாபு, ரமேஷ், ஸ்ரீஜேஸ் மற்றும் இளம் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகள், பேரூராட்சிகள், வனத்துறை மற்றும் காவல்துறை அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. கூடலூர் அரசு பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு நடத்துனர்கள் இனிப்பு வழங்கினர்.
The post குடியரசு தினத்தை முன்னிட்டு பேருந்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கிய நடத்துனர் appeared first on Dinakaran.
