கோயில் குளத்தில் தேங்கிய பிளாஸ்டிக் குப்பை கழிவுகள்

இளம்பிள்ளை, ஜன.21: இளம்பிள்ளை சந்தைப்பேட்டை மைய பகுதியில் மாரியம்மன், காளியம்மன் கோயில் உள்ளது. அறநிலைத்துறையின் கட்டிப்பாட்டில் உள்ள இக்கோயிலில், வருடந்தோறும் பங்குனி மாதத்தில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதற்காக கம்பம் போடும் நிகழ்ச்சி நடந்தது. பண்டிகை முடிந்தவுடன் கம்பத்தினை கோயில் முன்பு உள்ள குளத்தில் போடுவது வழக்கம். ஒரு காலகட்டத்தில் இக்குளத்தில் தான் கோயிலுக்கு தண்ணீரை எடுத்து பொங்கல் வைத்தும், பூஜை செய்து வந்தனர். தற்போது இந்த குளத்தில் பிளாஸ்டிக் பொருட்களும், குப்பைகளும் குவிந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை கோயில் நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். எனவே, அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, குளத்தை தூய்மைப்படுத்தி பாதுகாப்பு தடுப்புகள் அமைத்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோயில் குளத்தில் தேங்கிய பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் appeared first on Dinakaran.

Related Stories: