டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் சாமி தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. நேற்று முதல்வர் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஷ்கர் சிங் தாமி, “உத்தரகாண்ட்டில் கடந்த 2022 பேரவை தேர்தலுக்கு முன் மாநிலத்தில் பாஜ ஆட்சி அமைந்தால் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என உறுதியளித்தோம். அதன்படி மாநிலத்தில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு முதல் பேரவை கூட்டத்தில் அதற்கான செயல்முறைகள் தொடங்கப்பட்டன.
பொது சிவில் சட்டத்தை உருவாக்க ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பேரவையில் பொது சிவில் சட்டம் இயற்றப்பட்டு, நாட்டில் முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு மாநில ஆளுநரும், குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அது சட்டமாக மாறியது. தற்போது அதற்கான பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. இன்று(நேற்று) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து கருத்துகளையும் பரிசீலனை செய்த பிறகு பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் ” என்று தெரிவித்தார்.
The post உத்தரகாண்டில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்: முதல்வர் புஷ்கர் சிங் தாமி உறுதி appeared first on Dinakaran.
