கோபி: ஈரோடு அருகே உள்ள கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகர் (49). இவர் திருப்பூரில் உள்ள பிரபல துணிக்கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு சாகிதா என்ற மனைவியும், ராகுல் (27) என்ற மகனும் உள்ளனர். ராகுல், யூடியூப் சேனல் நடத்தி வந்தார். இன்ஸ்டாவில் பிரபலம். இவருடைய ரீல்ஸை பார்ப்பதற்கு ஒரு கூட்டம் உள்ளது. இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி நேரு நகரை சேர்ந்த வேலுமணி மகள் தேவிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராகுல் பைக்கில் ஈரோட்டில் இருந்து கவுந்தப்பாடிக்கு சென்று கொண்டிருந்தார். கவுந்தப்பாடி அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறிய பைக், சாலை நடுவே இருந்த தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
The post பிரபல யூடியூபர் விபத்தில் பலி appeared first on Dinakaran.