அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வியடெக், 6-0, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வெற்றி பெற்று 3ம் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த உலகின் 8ம் நிலை வீராங்கனை எம்மா நவரோ, சீனாவின் ஸியு வாங் உடன் மோதினார். இந்த போட்டியில் கடும் போராட்டத்தை சந்தித்த எம்மா நவரோ, 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 3ம் சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு போட்டியில் உலகின் 7ம் நிலை வீராங்கனையான, கஜகஸ்தானின் எலெனா ரைபாகினா, அமெரிக்காவின் இவா ஜோவிக் உடன் மோதினார்.
பெண்கள் பிரிவில் நேற்று நடந்த மற்ற போட்டிகளில், அமெரிக்காவை சேர்ந்த உலகின் 19ம் நிலை வீராங்கனை மேடிசன் கீஸ், கிரேட் பிரிட்டன் வீராங்கனை எம்மா ரேடுகானு, ரஷ்யாவின் டேரியா கஸாட்கினா, துனிசியாவின் ஓன்ஸ் ஜேபியுர், பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹடாட் மையா, அமெரிக்காவை சேர்ந்த உலகின் 10ம் நிலை வீராங்கனை டேனியல் காலின்ஸ், ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குடெர்மெடோவா வென்று 3ம் சுற்றுக்குள் நுழைந்தனர். ஆண்கள் பிரிவில் நடந்த மற்ற போட்டிகளில் செர்பிய வீரர் மியோமிர் கெக்மெனோவிக், ஆஸ்திரேலியாவை சேர்ந்த உலகின் 8ம் நிலை வீரர் அலெக்ஸ் டி மினார், அமெரிக்காவை சேர்ந்த உலகின் 4ம் நிலை வீரர் டெய்லர் பிரிட்ஸ், டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூன், அமெரிக்க வீரர்கள் பென் ஷெல்டன், அலெக்ஸ் மைக்கேல்சன், பிரான்ஸ் வீரர் கேயல் மொன்பில்ஸ், இத்தாலி வீரர்கள் லொரென்ஸோ முஸெட்டி, லொரென்ஸோ ஸொனேகோ, ஹங்கேரி வீரர் பேபியன் மரோஸான் உள்ளிட்டோர் வெற்றி பெற்று 3ம் சுற்றுக்கு முன்னேறினர்.
* இரட்டையர் பிரிவு போட்டியில் தமிழகத்தின் பாலாஜி வெற்றி
ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழ்நாட்டின் கோயம்புத்துாரை சேர்ந்த ஸ்ரீராம் பாலாஜி, மெக்சிகோ வீரர் மிகுயல் ரெயெஸ் வரேலா இணை, நெதர்லாந்து வீரர் ராபின் ஹாஸ், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் நெடோவ்யெஸோவ் இணையுடன் மோதினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்திய பாலாஜி இணை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று 2ம் சுற்றுக்கு முன்னேறினர். மற்றொரு போட்டியில் தமிழக வீரர்கள் நெடுஞ்செழியன், பிரசாந்த் இணை, பிரான்ஸ் வீரர் கிரிகோய்ர் ஜாக், பிரேசில் வீரர் ஒர்லாண்டோ லுஸ் இணையுடன் முதல் சுற்று போட்டியில் மோதியது. இதில் அபாரமாக ஆடிய ஜாக், லுஸ் இணை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று 2ம் சுற்றுக்கு முன்னேறியது.
The post ஆஸி ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில் இகா மாயாஜாலம்: ஆண்களில் சின்னர் போராடி வெற்றி appeared first on Dinakaran.
