இந்தநிலையில், பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுப்பிரமணியை கைது செய்யக்கோரியும் ஆதித்தமிழர் கட்சியினர் கோவை மாவட்ட பாஜ அலுவலகத்தின் மீது மாட்டிறைச்சி வீசும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர். ஆதித்தமிழர் கட்சியினர் மாவட்ட தலைவர் வின்சென்ட் தலைமையில் கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாஜ அலுவலகத்தை நோக்கி சென்றபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் சாலையில் மாட்டிறைச்சியை வீசி போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆதித்தமிழர் கட்சியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
The post கோவை பாஜ அலுவலகத்தில் மாட்டிறைச்சி வீசி போராட்டம் appeared first on Dinakaran.
