வழக்கில் கைது செய்யப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதன் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகநாதன் வழக்கு தொடர்ந்திருந்தார். துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார். தடையை நீக்கக் கோரி காவல்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணையை தொடரலாம் என்றும் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, விசாரணையை ஜனவரி .28க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
The post பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணையை தொடரலாம் : ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.