கருங்கல்: கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கருங்கல் மார்க்கெட் உட்பட பல இறைச்சி கடைகளில் இருந்து கழிவு இறைச்சிகளை தின்று அப்பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்கள் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்தி செல்வதுடன் குறுக்கே பாய்வதால் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. அப்பகுதிகளில் நடந்து செல்லும் பொது மக்களையும் துரத்திச் சென்று கடிக்கிறது. இந்த தெரு நாய்கள் வெளியில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு விட்டு கருங்கல் காவல் நிலைய வளாகத்திற்குள் வந்து சாவகாசமாக படுத்துக் கொள்கின்றன.
இவை புகார் அளிக்க வருபவர்களை அச்சுறுத்தி வருகின்றன . தெரு நாய்களை காவல் நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்த கருங்கல் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தெரு நாய்களுக்கு வெறி ஏற்படுவதற்கு முன்பு அதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கருங்கல் காவல் நிலையத்தில் அச்சுறுத்தும் தெரு நாய்கள் appeared first on Dinakaran.