இதனால் முதுநிலை நீட் தேர்வு எழுதியவர்கள் பூஜ்யம் மதிப்பெண் பெற்று இருந்தாலும் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பில் சேர முடியும் என்ற நிலை உருவானது. இதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த ஆண்டும் நீட் முதுநிலை மருத்துவ இடங்கள் காலியாகாமல் நிரப்புவதற்காக கட் ஆஃப் பெர்சன்டைலை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. உயிரி வேதியியல், உடற்கூறியல், ப்ரீ-கிளினிக்கல், பாரா கிளினிக்கல் பாடப் பிரிவுகளில் அதிகமான காலி இடங்கள் இருப்பதாகாவும், அதனை நிரப்புவதற்காக பெர்சன்டைல் குறைக்கப்படுவதாக மருத்துவ கலந்தாய்வு குழு தெரிவித்துள்ளது.
மருத்துவ கலந்தாய்வு தொடக்கத்தில் பொதுப்பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் பின்தாக்கிய உயர்சாதி வகுப்பினருக்கு 50 பெர்சன்டைல் மற்றும் எஸ்.சி./எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 40 பெர்சன்டைல் இருந்தது. தற்போது பொதுப்பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய தேர்வர்களுக்கு 15 பெர்சன்டைல் என்றும், எஸ்.சி./எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 10 பெர்சன்டைல் என்றும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் குறைத்துள்ளது. பெர்சன்டைல் குறைக்கப்பட்டுள்ளதால் முதுநிலை மருத்துவ இடங்களில் நிரப்புவதற்கு கோடிக்கணக்கில் விற்பனை மோசடிக்கான கதவுகள் திறந்திருப்பதாக கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
The post நீட் முதுநிலை கட்-ஆஃப் பெர்சன்டைல் குறைப்பு: கோடிக்கணக்கில் விற்பனை மோசடி கதவுகள் திறந்திருப்பதாக கல்வியாளர்கள் கண்டனம்!! appeared first on Dinakaran.