அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வாகனத்தை முந்த முயன்ற போது லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் ஊழியர் பலி: போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வாகனத்தை முந்த முயன்ற போது எதிர் திசையில் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (52), ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் துரை தென்னரசு (50). இருவரும் உறவினர்கள். இருவரும், பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். நேற்று இரவு 7 மணியளவில், கண்ணன் மற்றும் துரை தென்னரசு ஆகியோர் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை மேனாம்பேடு சாலையில், முன்னே சென்ற வாகனத்தை கண்ணன் முந்தி செல்வதற்கு முயன்றார்.

அப்போது எதிர் திசையில் வந்த லாரி மோதியதில் இருவரும் தூக்கி விசப்பட்டனர். லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், துரை தென்னரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கண்ணன் லேசான சிராய்வுகளுடன் தப்பினார். பின்னர் தகவலறிந்து வந்த, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் துரை தென்னரசு உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

 

The post அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வாகனத்தை முந்த முயன்ற போது லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் ஊழியர் பலி: போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: