பேரவை தொடக்கத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதுதான் மரபு. அந்த மரபை மாற்றி அமைக்க நினைக்கும் ஆளுநரின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. தமிழ் மொழியினை மதிக்காத எவரும் தமிழ்நாட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என சாடினார். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு புடவை, சமையல் பாத்திரங்கள், விளையாட்டு வீரர்களுக்கு மட்டைப்பந்து, பந்து, ஸ்டிக், கால்பந்து, இறகுப்பந்து போன்றவை வழங்கப்பட்டன. இதில் திமுக பேச்சாளர்கள் ஈரோடு இறைவன், ஜோதி, ஆவடி மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், ஆவடி மேயர் உதயகுமார், பகுதிச் செயலாளர் பொன் விஜயன், பிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post தமிழை அவமதித்த எவரும் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை: கவர்னர் ரவி மீது அமைச்சர் நாசர் சாடல் appeared first on Dinakaran.