புழல்: புழல் கதிர்வேடு அரசு பள்ளியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுசுவர் அமைக்கும் பணியை 31வது வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மாதவரம் மண்டலம், 31வது வார்டுக்கு உட்பட்ட புழல் அடுத்த கதிர்வேடு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த, 2 பள்ளிகளிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு, சுற்றுசுவர் அமைக்க வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்களும், கதிர்வேடு பகுதி மக்களும், வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபுவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
அதன்படி, மாநகராட்சி மாதவரம் மண்டலம் சார்பில், கதிர்வேடு பள்ளிக்கு சுற்றுசுவர் அமைக்க ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அப்பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி, 31வது வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு தலைமையில் நேற்று நடந்தது. இதில் வார்டு உதவி பொறியாளர் லோகேஷ், திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கதிர்வேடு பாபு, 31வது வார்டு திமுக துணை செயலாளர் பொன்.சதீஷ்குமார், பள்ளி ஆசிரியர்கள், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post புழல் கதிர்வேடு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல் appeared first on Dinakaran.