புரட்சி பாரதம் மாநில செயலாளர் தந்தையின் படத்திறப்பு விழா

திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயலாளர் பழஞ்சூர் பா.வின்சென்ட் தந்தை எம்.பாலகிருஷ்ணன் (எ) மேஷாக் சாலமோன் கடந்த மாதம் 27ல் வயது மூப்பு காரணமாக காலமானார். இதனையடுத்து அவரது படத்திறப்பு விழா மற்றும் 13ம் நாள் ஆறுதல் ஜெபக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ரீட்டா, ஆர்லிஸ், பால் எசேக்கியல், சாத்ராக், ஏசுமணி, ராஜ்குமார் ஆகியோர் வரவேற்றனர். புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை மு.ஜெகன் மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்தார்.

இதில் பாஸ்டர் ஜெ. ஐசக், ஆயர்கள் ஜோனத்தான் லெக்லர், கிளாரிஸ்ஸா, ஜான் லூயிஸ், பாஸ்டர்கள் ஹாரிசன் டார்வின், அகஸ்டின், சாம்சன், ஏசுபாதம், அதிமுக ஒன்றியச் செயலாளர் கௌதமன், கட்சியின் துணை பொது செயலாளர் முல்லை பலராமன், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் தர், மாநில நிர்வாகிகள் பெரமையன், வலசை தர்மன், தாமஸ் பர்ணபாஸ், சிவராமன், முரளி, சேஷாத்திரி, அதிமுக நிர்வாகிகள் தனசேகர், ருத்தரகுமார், ராமச்சந்திரன், குமார், விவேக் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள், செம்பரம்பாக்கம், பழஞ்சூர் பாப்பான்சத்திரம் கிராமமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

The post புரட்சி பாரதம் மாநில செயலாளர் தந்தையின் படத்திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: