கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வரும் 16ம் தேதி செயல்படாது

பூந்தமல்லி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தையில் அங்காடி நிர்வாக சார்பில் சிறப்பு சந்தை நேற்று முன்தினம் முதல் வரும் 16ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு சொந்த ஊர் செல்ல இருப்பதால், வரும் 16ம் தேதி, அதாவது காணும் பொங்கல் அன்று கோயம்பேடு காய்கறி அங்காடிகளில் உள்ள அனைத்து கடைகளும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயம்பேடு காய்கறி அனைத்து கூட்டமைப்பு சங்கங்களின் தலைவர் ராஜசேகரன் கூறுகையில், கோயம்பேடு காய்கறி அங்காடியில் கடை வைத்துள்ள வியாபாரிகள் மற்றும் கூலிதொழிலாளர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக அவரவர் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதால், வரும் 16ம் தேதி, அதாவது காணும் பொங்கல் அன்று கோயம்பேடு காய்கறி அங்காடியில் உள்ள அனைத்து காய்கறி கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி வழக்கம் போல் காய்கறி மார்க்கெட் இயங்கும் என்றார்.

 

The post கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வரும் 16ம் தேதி செயல்படாது appeared first on Dinakaran.

Related Stories: