செவந்தாம்பாளையத்தில் குழாயில் ஏற்பட்ட கசிவால் வீணாகும் குடிநீர்

 

திருப்பூர், ஜன.8: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கும் 2, 3 மற்றும் 4ம் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பகுதிகளில் மூன்றாவது குடிநீர் திட்டத்தின் மூலமாகவே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட செவந்தாம்பாளையம் பகுதியில் இருந்து முத்தனம்பாளையம் செல்லும் சாலையில் குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடிய குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வெளியேறும் தண்ணீரானது சாலையில் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது‌. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவதாகவும் இதனை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post செவந்தாம்பாளையத்தில் குழாயில் ஏற்பட்ட கசிவால் வீணாகும் குடிநீர் appeared first on Dinakaran.

Related Stories: