கிருஷ்ணகிரி, ஜன.8: கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே மாதனகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிஷ்காந்த்(58). கூலி தொழிலாளியான இவர், குப்பம் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், மாதனகுப்பம் பகுதியில் கடந்த 5ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த கார் மோதியது. இதில், படுகாயமடைந்த முனிஷ்காந்தை அங்கிருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post கார் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.