வனத்தை கடக்கும் போது மெதுவாக செல்ல வேண்டும்; வனத்துறையினர் வேண்டுகோள்

 

ஓசூர், ஜன.5: ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அடிக்கடி ஓசூர் – தர்மபுரி மாநில நெடுஞ்சாலையையும், பெங்களூரு – சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையையும் கடந்து செல்வது வழக்கம். இந்த 2 சாலைகளும் சானமாவு வனப்பகுதியில் அமைந்துள்ளன. எனவே, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் ஒலி எழுப்பி, நிதானமாக செல்ல வேண்டும்.

குறிப்பாக டூவீலர் ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும். யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினாலும், மீண்டும் மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு வருவது வழக்கமாக உள்ளது. எனவே, யானைகளை துன்புறுத்தக் கூடாது. யானைகள் மீது கல் எறியவோ, செல்பி எடுக்கவோ கூடாது, கனரக வாகனங்கள் சாலையில் செல்லும் போது கண்டிப்பாக ஒலி எழுப்பி மெதுவாக செல்ல வேண்டும். மேலும் கால்நடைகளை மேய்க்கவும், விறகு எடுக்கவும் வனப்பகுதிக்கு செல்லக்கூடாது என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

The post வனத்தை கடக்கும் போது மெதுவாக செல்ல வேண்டும்; வனத்துறையினர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: