கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாப பலி

ஆவடி: ஆவடி கோவில்பதாகை கிழக்கு மாடவீதி பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (35) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மோனிஷா (30) என்ற மனைவியும் இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று மாலை, அவரது மனைவி மற்றும் மூத்த மகன் பிரித்திவின் (6) ஆகிய இருவரும் உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது, செல்போனை வீட்டிலேயே விட்டுவிட்டதால், பிரித்திவினிடம் செல்போனை எடுத்து வருமாறு மோனிஷா கூறியுள்ளார். பிரித்திவின் உள்ளே செல்லும்போது, படிக்குகீழே உள்ள 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தான்.

நீண்ட நேரம் ஆகியும் மகன் வராததால், மோனிஷா வீடு முழுவதும் தேடி பார்த்துள்ளார். நீண்ட நேரம் கழித்து பிரித்திவின் உடல் கிணற்றில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஆவடி தீயணைப்புத் துறை, ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி சிறுவன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: