‘96’ திரைப்பட பாணியில் கவரப்பேட்டை அரசுப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘96’ திரைப்பட பாணியில் 1996ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் ஐயப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் வரவேற்றனர் முன்னாள் ஆசிரியர்கள் செல்வம், ஆறுமுகம், அண்ணாமலை, நாராயணன், பழனி, பானுரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அப்போதைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். அப்போது முன்னாள் ஆசிரியர் ஒருவர் பேசுகையில், 1996ம் ஆண்டு நான் கணக்கு வாத்தியாராக பணியாற்றினேன்.

அப்போதைய கவரப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் ஒழுக்கத்தோடு படித்தனர். அப்போதைய பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர், முன்னாள் எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி வேணு, அப்போதைய மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு இந்த பள்ளிக்கு பல கட்டிடங்களை உருவாக்கினார். அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்கள் நியமனத்தையும் உடனுக்குடன் நிறைவேற்றினார் என்றார். பின்னர், முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு பீரோ உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணங்களை வழங்கினர். தற்போது படிக்கும் மாணவர்களும் வரும் காலங்களில் படித்த பள்ளிகளை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமென முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர். கடைசியில் முன்னாள் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

The post ‘96’ திரைப்பட பாணியில் கவரப்பேட்டை அரசுப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: