சாலையை கடந்தபோது தறிகெட்ட வேகத்தில் வந்த பைக் மோதி முதியவர் பலி

புழல்: செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டம்தாங்கள், மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (76). இவர் தமிழக காவல்துறையில் அமைச்சு பணியில் ஓய்வுபெற்ற ஊழியர் ஆவார். இவர், நேற்று காலை பாடியநல்லூர் ஜி.என்.டி சாலை சிக்கனலில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அதிவேகமாக வந்த பைக் ராமகிஷ்ணன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்து மயங்கிய ராமகிருஷ்ணனையும், விபத்தை ஏற்படுத்தி, தலையில் பலத்த காயமடைந்த புழல் அடுத்த மஞ்சம்பாக்கம் காமராஜர் சாலையைச் சேர்ந்த வசந்த் (21) என்பவரையும் மீட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, ராமகிருஷ்ணனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், தலையில் பலத்த காயமடைந்த வசந்த்துக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ராமகிருஷ்ணனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலையை கடந்தபோது தறிகெட்ட வேகத்தில் வந்த பைக் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: