ராஜபாளையம், ஜன.7: தேர்தல் கால வாக்குறுதியில் கூறியபடி அங்கன்வாடி, சத்துணவு ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூ.7850 வழங்க வேண்டும் என ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜபாளையம் ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர் ராமசுப்பு முன்னிலையில், நகர தலைவர் கிருஷ்ணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதியின்படி அங்கன்வாடி மற்றும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.2000ல் இருந்து ரூ.7850 வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. கூட்டத்தில் தீர்மானங்களை ஆதரித்து நெல்லை மாவட்ட மாநில மகளிர் அணி அமைப்பாளர் தேவிகா, சண்முகத்தம்மாள், சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
The post அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிட கோரிக்கை appeared first on Dinakaran.