பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது

 

கரூர், ஜன.8: கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள எல்லைமேடு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.43 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 28 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது. வாங்கல் போலீசார் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: