வேதாரண்யம், ஜன. 8: வேதாரண்யம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 18 ஊராட்சிகளில் 74 பூத்துகளுக்கான பூத் கமிட்டி கூட்டம் ஆதனூர், கோடியக்காடு கரியாபட்டிணம், உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சதாசிவம் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தாமரைச்செல்வன் வரவேற்றார். கூட்டத்தில் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்களின் பணிகளைப் பற்றியும், 100 வாக்காளர்களை கவனிக்கும் பொறுப்பை தொடர்ந்துசெய்திட வேண்டும் எனவும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டிய கடமையும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியை மீண்டும் திமுக வெற்றி பெறச் செய்ய தொடர்ந்து பாடுபட வேண்டும் என பேசினார் கூட்டத்தில் ஒன்றிய அவைத் தலைவர் ஏகாம்பரம், மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் சோழன், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜகோபால், முத்துலட்சுமி தென்னரசு, மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் கோவிந்தராசு, மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் மோகனதசமணி உள்ளிட்ட கிளை கழக நிர்வாகிகள், பாக முகவர்கள், பூத்தமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
The post வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் appeared first on Dinakaran.