மதுரை, ஜன. 7: மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (79). மாடி வீட்டில் வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று படியில் ஏறும் போது தவறி விழுந்தார். அப்போது மயக்கம் வருவதாக கூறியதால் அவரை மீட்டு சிகிச்சைக்காக ரிங்ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சூரியகாந்தி புகாரில் கீரைத்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதுபோல செல்லூர் போஸ் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (63). சமையல் தொழிலாளி. வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். திரும்பி வரவில்லை. அப்பகுதி வார்டு வாட்ஸ் ஆப் குழுவில் செல்லூரில் உள்ள ஒரு திரையரங்கு முன்பாக ஒருவர் இறந்து கிடப்பதாக வீடியோ பதிவு வந்தது. இதனை கண்டு சந்தேகப்பட்ட மகன் முத்துகுமார், அங்கு சென்று பார்த்தார். இறந்து கிடந்தது தனது தந்தை என உறுதி செய்து செல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post மதுரையில் சமையல் தொழிலாளி உள்பட 2 பேர் சாவு appeared first on Dinakaran.