நாட்டில் சென்னையில் 2 குழந்தை, பெங்களூரில் 2 குழந்தை, குஜராத்தில் ஒரு குழந்தை என 5 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டு குழந்தைகளுக்கு வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த வைரஸ் பரவல் குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்றும், தமிழகத்தில் பரவக்கூடிய HMPV வைரஸ் காய்ச்சல் வழக்கமாக பல ஆண்டுகளாக இருக்கும் வைரஸ் காய்ச்சல் தான் என்றும் தமிழக பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறை கூறியிருப்பதாவது: HMPV வைரஸ் பாதிப்பு என்பது பல ஆண்டுகளாக தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரு வகை காய்ச்சல் தான்.
சளி, காய்ச்சல் என வழக்கமாக இருக்கக்கூடிய காய்ச்சல் தான் இது. யாரும் பயப்பட தேவையில்லை. சீனாவில் உருமாற்றம் அடைந்த HMPV வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. இந்த வகை வைரஸ் பாதிப்பு பரவும் போது தான் நோயாளிகளிடம் இருந்து விரைந்து பரவும் தன்மை கொண்டதாக இருக்கும். ஆனால் தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த HMPV வைரஸ் பாதிப்பு என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஏற்கனவே இருக்கின்ற HMPV வைரஸ் பாதிப்பாகத்தான் தற்போது தமிழகத்தில் பரவி வருகிறது. எனவே யாரும் பயப்பட தேவையில்லை. குறிப்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் HMPV வைரஸ் பாதிப்பு குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்: தமிழக பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.