டெல்லி: எச்எம்பிவி வைரஸ் ஒன்றும் புதிதல்ல என்றும் 2001ம் ஆண்டு முதலே உலகம் முழுவதும் பரவி வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம் அளித்துள்ளார். சீனாவை அச்சுறுத்தும் எச்எம்பிவி வைரஸ் தொற்று இந்தியாவில் இதுவரை 6 குழந்தைகளுக்கு உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா; எச்எம்பிவி வைரஸ் முதல் முதலில் 2001ம் ஆண்டு கண்டறியப்பட்டது என்றும் அவை பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவி வருகிறது என்றும் தெரிவித்தார்.
எச்எம்பிவி வைரஸ் காற்று சுவாசம் மூலம் பரவுகிறது என்று கூறிய அவர்; அனைத்து வயதினரையும் பாதிக்கலாம் என்று தெரிவித்தார். குளிர்காலத்தில் எச்எம்பிவி வைரஸ் அதிகம் பரவுவதாகவும் அவர் தெரிவித்தார். எச்எம்பிவி வைரஸ் குறித்து கவலைப்பட எந்த காரணமும் இல்லை என்றும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் அவர் கூறினார். நாட்டின் சுகாதார அமைப்புகள் விழிப்புடன் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், எந்த ஒரு சுகாதார சவால்களுக்கும் உடனடியாக பதிலளிக்க தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
The post எச்எம்பிவி வைரஸ் பற்றி கவலை தேவையில்லை: ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம் appeared first on Dinakaran.