தமிழ்நாடு சட்டப்பேரவையை ஆளுநர் அவமதித்துவிட்டார். சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே ஆளுநர் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.தேசிய கீதத்தை இருமுறை அவமதித்தது ஆளுநர் ஆர்.என்.ரவிதான். சட்டப்பேரவையை அவமதித்ததற்கு ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும். முதலமைச்சருக்கு பாடம் எடுக்கும் தகுதி ஆளுநர் ரவிக்கு கிடையாது. ஆளுநர் ரவிக்கு மட்டும்தான் தேசபக்தி அதிகம் உள்ளது போல காட்டிக் கொள்கிறார். சுதந்திரத்திற்காக தமிழகத்தில் உயிர்நீத்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.தேசிய கீதத்திற்கு தமிழக மக்கள் மற்றும் சட்டப்பேரவை அவமரியாதை செய்யாது.திமுக அரசின் சாதனைகளை கூற வேண்டும் என்பதாலேயே ஆளுநர் வெளியேறினார்.அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பதை தடுக்கவே ஆளுநர் வெளியேறினார்.ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதவி நீட்டிப்பு வழங்கவில்லை, ஆளுநர் பதவியில் அவர் ஒட்டிக்கொண்டிருக்கிறார். அதை அவமானமாக கருதி, அவராக ராஜினாமா செய்துவிட்டு செல்வது தான் அவருக்கு அழகு, “இவ்வாறு தெரிவித்தார்.
The post தேசிய கீதத்தை இருமுறை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் : அமைச்சர் சிவசங்கர் காட்டம் appeared first on Dinakaran.