சென்னை: ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டவை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்ற தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேறிய பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டு, சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் நிறைவடைந்தது, அலுவல் ஆய்வுக்குழு இன்று மாலை கூடி, எத்தனை நாட்கள் அவையை நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கும்.