அயனாவரம், அன்னை சத்யா நகரில் உள்ள பூங்காக்களை மேம்படுத்த வேண்டும்: மாநகராட்சி அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்

சென்னை: சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 44 வார்டுகளில் உள்ள 83 வட்டங்களிலும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று, பொதுமக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காணும் நிகழ்ச்சி, தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதன்படி 6வது நாளாக நேற்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, 97வது வார்டு, அயனாவரம், நியூ ஆவடி சாலை, வெள்ளாளர் தெருவை சேர்ந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அப்பகுதியிலுள்ள மாநகராட்சி விளையாட்டு திடல் மற்றும் பூங்காவை நேரில் சென்று பார்வையிட்டு, பூங்காவை மேம்படுத்தி தருமாறும், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தையும் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து துறைமுகம் சட்டமன்ற தொகுதி, 60வது வார்டு, ராஜாஜி சாலை உள்ள அன்னை சத்யா நகரில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அப்பகுதியிலுள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடல் மற்றும் பூங்காவை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பூங்காவை மேம்படுத்தி, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் படிப்பதற்குண்டான வசதியை ஏற்படுத்தி தருமாறும் மாநகராட்சி அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, மேயர் பிரியா, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன், வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மின்வாரிய அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

 

The post அயனாவரம், அன்னை சத்யா நகரில் உள்ள பூங்காக்களை மேம்படுத்த வேண்டும்: மாநகராட்சி அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: