இதேபோல், விமானங்கள் தாமதங்கள் குறித்து பயணிகளுக்கு, முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது விமான போக்குவரத்து சட்ட விதிகளில் உள்ளது. ஆனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு விமானங்கள் தாமதம் குறித்து தகவல் தெரிவிப்பது கிடையாது. எனவே, முன்பதிவு செய்த பயணிகள், முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து காத்திருக்கின்றனர். அதுவும் சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் புறப்பாடு வருகை குறித்து அறிவிக்கும் டிஸ்ப்ளே போர்டில், விமானம் குறித்த நேரம் என்று போடப்பட்டிருக்கிறது. ஆனால் விமான கவுன்டரில் கேட்டால், அந்த விமானம் தாமதம் என்று கூறுகின்றனர். இதேபோல் முரண்பட்ட தகவல்களால், பயணிகள் அலைக்கழிக்கப்படும் அவல நிலை, சென்னை விமான நிலையத்தில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால் விமான நிறுவனங்கள் விமானங்கள் தாமதங்கள் குறித்து விமான போக்குவரத்து சட்ட விதிகளின்படி, டிக்கெட் முன்பதிவு செய்து இருந்த பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும். அதோடு சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை புறப்பாடு அறிவிப்பு டிஸ்பிளே போர்டுகளில், தவறான அறிவிப்புகளை செய்து, பயணிகளை அலைக்கழிக்காமல், விமானங்கள் தாமதங்கள் அல்லது ரத்து குறித்து, முறையாக முன்னதாகவே அறிவிக்க வேண்டும். இவைகளை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.
The post சென்னை விமான நிலையத்தில் கொல்கத்தா, டெல்லி, மும்பை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.