புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின்கீழ் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.20/- வீதம், மாதத்திற்கு ரூ.600/- ஆக வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப் படியினை. ஒரு நாளுக்கு ரூ.33/- வீதம் ரூ.1000/-ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.
ஒரு சத்துணவு அமைப்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட சத்துணவு மையங்களை கூடுதலாக கவனித்து வந்தாலும், ஒரு மையத்திற்கு உண்டான கூடுதல் பொறுப்புப்படி மட்டுமே வழங்கப்படும். ஒரு வாரத்திற்கு மேல் கூடுதல் பணிபுரிந்தால் மட்டும் கூடுதல் பொறுப்புப்படி வழங்கப்படும்.
அதனைத் தொடர்ந்து, பொறுப்பேற்ற நாளிலிருந்து முடியும் நாள் வரை உள்ள காலத்திற்கு தற்செயல் விடுப்பு நாட்களைத் தவிர, ஏனைய கூடுதல் பொறுப்பேற்ற நாட்களுக்கு (விடுமுறை நாட்கள் உட்பட) பொறுப்புப்படி வழங்கப்படும்.
ஒரு வாரத்திற்குமேல் பணிபுரிந்து இருந்தால் (ஒரு மாதம் முழுவதும் பணிபுரியாமல்) பணியாற்றிய நாளுக்கு (1000+30 = 33.33 (Round off Rs.33/-) ரூ.33/- வீதம் கணக்கிட்டு வழங்கப்படும். ஒரு மாதம் முழுவதுமாக கூடுதல் பணிபுரிந்து இருந்தால், கூடுதல் பொறுப்புப்படியாக ரூ.1.000/- வழங்கப்படும்.
உயர்த்தப்படும் கூடுதல் பொறுப்புப்படி, இவ்வாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது. மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின்கீழ். பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப்படியினை ரூ.1000/- உயர்த்தி வழங்குவதால் ஆண்டிற்கு தோராயமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினம் ரூ.6,68,11,200/-(ரூபாய் ஆறு கோடியே அறுபத்தெட்டு இலட்சத்து பதினோராயிரத்து இருநூறு மட்டும்) ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது.
மேலே பத்தி 3-இல் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள தொகை பின்வரும் கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்படவேண்டும். (D No.45-03) “2236-சத்துணவு 02 – சத்துணவு மற்றும் பானங்கள் வழங்குதல் 102 மதிய உணவு மாநியச் செலவினங்கள் – KL 5 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளுக்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் – 301 சம்பளங்கள் -01 அடிப்படை சம்பளம்* (IFHRMS DPC 2236 02 102 KL 30101)” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சத்துணவு அமைப்பாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.